“அருண கிரண ஜாலை: ரஞ்ஜிதா ஆஷா அவகாஷா…
வித்ருத ஜப படீகா புஸ்தகா அபீதி ஹஸ்தா:
இதர கர வராட்யா புல்ஹ கல்ஹார ஸ்மஸ்தா…
நிவஸது ஹ்ருதி பாலா…
நித்ய கல்யாண ஷீலா”
இளம் சூரியனான அருணனின் சிவந்த கிரண ஔி போல் ஜொலிப்பவளும் நம் ஆசைகளை நிறைவேற்றுபவளும் உயர்த்திய கரங்களில் ஜப மாலை புஸ்தகம் அபய முத்திரையுடன் இருப்பவளும் மற்றைய கரத்தில் வரத்தை ஈபவளும் அன்றலர்ந்த வெண் தாமரையில் வீற்றிருப்பவளும் என்றும் நம் இதயத்தில் வசிப்பவளும் தினமும் மங்களங்களை வர்ஷிப்பவளும் ஆன ஈடு இணையற்ற பாலா திரிபுர சுந்தரியை த்யானிக்கிறேன்..
மேலே உள்ள ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் ஸர்வ லோகத்தையும் வென்றிடும் ஆற்றல் கைவரப் பெறும்.....
ஸ்ரீ பாலாவின் மந்திர ஜெபம்.. சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும் சர்வ வல்லமைபெற்றது என்பது சத்யமான நிதர்சனம்.
குழந்தை வடிவம் கொண்டவள் ஸ்ரீபாலா குறைகளை நீக்குபவள் ஸ்ரீபாலா.
அபய முத்திரையோடு, தாமரைப்பூவில் அமர்ந்து இந்த அகிலத்தையுமே இரட்சிக்கவந்தவள் ஸ்ரீபாலா. சகல வித்தைகளும் தன் பக்தர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தன் இடக்கரத்தில் நூலை ஏந்தியிருப்பதை நாம் தரிசிக்க முடிகிறது. அம்பிகையின் நாமஜெபம் இருள் அகற்றி அகத்தில் ஒளி அருள் நிறைய வேண்டும் என்பதற்காக மற்றொரு கரத்திலே ஜெபமாலையோடு காட்சி தந்து ஆட்சி செய்கிறாள்.
பட்டாடையுடன் இரத்தினங்கள் ஜொலிக்க, முழுநிலவின் மொத்த ஒளியையும், நட்சத்திரங்கள் அத்தனையும் ஒரு சேர வெளிச்சம் தந்தாலும், பாலாவின் மூக்குத்தி ஒளியின்முன் ஈடாகாது. ஸ்ரீபாலாவைப் பார்க்க பார்க்க பரவசம். அவள் பக்தர்களுக்கு தரும் தரிசனமே..சுவைக்கின்ற பழரசம்.
அம்பிகையின் வடிவமான ஸ்ரீபாலாவை அனுதினமும்...தொழுவோம்...அவள் அருளினைப் பெறுவோம்.