சென்னை அடையாறு ராமசாமி கார்டனில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு... மகாப் பெரியவா பல வருடங்களுக்கு முன் எழுந்தருளினார். அப்போது சுவாமிகளை எறும்புகள் தீண்டின. புற்றில் உள்ள எறும்புகள் ஏன் தன்னைத் தீண்டுகிறது என சுவாமிகள் வினவி...பின்....மௌனமாய்...அங்கிருந்து புறப்பட்டார். பின் அந்தக் கோயில் சிதிலமடைந்தது.
சிதிலமடைந்த அந்தப் புற்றுக் கோயில் இருந்த இடத்தில் தேவி எழுந்தருள வேண்டும் என அவள் திருவுளம் விரும்ப.. அங்கே பிரம்மாண்டமாய் கோயில் எழும்பியது. அருகிலேயே ஸ்ரீபாலாவின் சந்நிதியும் எழுந்தது.
அடுத்த சந்நிதியில் சுயம்பு கருமாரி, 18ம் படி கருப்பண்ணர், நின்ற நிலை காமாட்சி, காளி, ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி உற்சவ தெய்வங்களாய் அருள் பாலித்து வருகிறாள்.
முறைப்படி நடக்க வேண்டிய பூஜைகள் அனைத்தும் நேம நிஷ்டைகளுடன் வெகு சிறப்பாக இங்கே நடந்தேறுகிறது. ஒவ்வொரு பௌர்ணமி திருநாள் அன்று விசேஷ பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
அவள் மிகவும் சக்தி வாய்ந்தவள்...கேட்ட வரங்களை அள்ளித் தருபவள் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த பக்தர்கள் கூட்டம் தினம் தினம் கூடிக் கொண்டே இருக்கிறது
ஸ்ரீதேவி சுயம்பு கருமாரி அம்மன் ஆலயம் ஸ்ரீபாலா பீடத்தினை நிர்வகித்து அனைத்து பூஜைகளையும் முன் நின்று நடத்தி வருபவர் ஸ்ரீ ஸ்ரீ பால சைதன்ய ஸ்வரூப ஸ்வாமிஜி.
ஸ்ரீபாலா அவர் கனவில் தோன்றி தான் இடம் மாற வேண்டும் என தனது விருப்பத்தை கூற அடையாறு ஸ்ரீபாலா பீடம் விரைவில் சென்னை ஈ.ஸி.ஆர் சாலை, புறநகர் பகுதியிலே மிகப் பிரம்மாண்டமாக அமைய இருக்கிறது.
ஸ்ரீபாலாவின் அன்புக்கட்டளையை நிறைவேற்ற அறக்கட்டளை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது அடையாறிள் உள்ள ஸ்ரீ பாலா பீடம் கோயில் திறப்பு மற்றும் நிறைவு நேரம் மற்றும் பூஜை நேரம் ஆகியவற்றை அறிய
செல்வி சரண்யாவை (+91 9952953318)
தொடர்பு கொள்ளவும்